உள்நாடு

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அவசரமாக கூடியது!

இரத்தினபுரி மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ குழு இன்றைய தினம் (28) அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவசர மாக கூடியது.

இங்கு, மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குதல், பாதுகாப்பு மையங்களுக்கு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுதல் ஆகிய விடயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பத்மகுமார, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சட்டத்தரணி ஆர்.ஜி. நிலூஷா லக்மாளி, இரத்தினபுரி மாநகர சபையின் தலைவர் இந்திரஜித் கடுகம்பல, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன உட்பட மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இனது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

கிழக்கு ஆளுநர் – வேலையற்ற பட்டதாரிகள் விசேட கலந்துரையாடல்

editor