உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மண் சரிவு அபாயம் உள்ள வலயங்களாக எஹலியகொடை, -கிரியெல்ல-, குருவிட்ட,- இரத்தினபுரி,- எலபாத, -பெல்மதுளை, -நிவிதிகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாவது எச்சரிக்கை விடுக்கும் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மண் சரிவு அபாயம் உள்ளதாக இரண்டாவது கட்ட அபாய அறிவிப்பு கலவான பிரதேச செயலகப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேச செயலக பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ள இடங்கள் என இனங் காணப்பட்டுள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related posts

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்தது

editor

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

editor

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை