அரசியல்உள்நாடு

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

இதன்போது, ​​மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற மரபு தொடர்பான வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் தற்போதைய செயல்பாடு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வருகை தந்திருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து சபாநாயகர் தெரிவு செய்யப்படல், சபாநாயகர் பதவியேற்பு மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாடசாலைக்கு பெறுமதியான மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் ‘Vision’ சஞ்சிகையை வழங்கும் நிகழ்வு என்பன இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி அலுவலக முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள ‘டியூஷன் ஒன்றியம்’