உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (31) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இடம் பெறவுள்ளது.

இரத்தினபுரி சிவன் கோவிலிலும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் வரும் விசர்ஜன விநாயகர் வாகனங்களுடன் அணிவகுத்து ஊர்வலமாக திருவானக்கெட்டிய ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பிரதான வீதி வழியாக இரத்தின சபேஷ்வரர் சிவன் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு விசேட பூஜைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பின்னர், பிரதான வீதி வழியாக புலுங்குபிடிய பாலத்துக்கருகில் ஓடும் களுகங்கையில் மதியம் 03 மணிக்கு விநாயகர் சிலைகள் விஷர்ஜனம் (தீர்த்த விழா) நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விசேட பூஜைகள் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ள ஆலயங்கள், அறநெறிகள், இந்து அமைப்புகள் அனைவருக்கும் 108 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்து கையளிக்கப்பட்டுள்ளது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

‘ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டு’ – கட்சித் தலைவர்கள் தீர்மானம்

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு

83 எம்பிக்களின் பதவிகள் பறிபோகும் நிலை?