உள்நாடு

இரத்தினக்கல் வர்த்தகர் கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

(UTV|GALLE)- தலாபிடிய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் நாளை மறுதினம்(08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த வருடம் செப்டெம்பர் 19ஆம் திகதி குறித்த வர்த்தகர் வீட்டில் இருந்தபோது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

இலங்கைக்கு வாக்குறுதி வழங்கிய சீன ஜனாதிபதி!