கிசு கிசு

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே எரிபொருள் உள்ளது

(UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தடையில்லாமல் எரிபொருள் வழங்கலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், விரைவாக எரிபொருள் விலை நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறும் அவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இறக்குமதிக்கான வரிச்சலுகை அல்லது விலை திருத்தம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கக்கூடும்.

இலங்கை பெற்றோலிய ஸ்தாபனம் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 83 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இழப்புகள், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் 120 பில்லியன் ரூபாயை எட்டும்.

மேலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை நீக்கியமையின் மூலம், மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அதற்குப் பின் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாகந்துரே மதூஷ் இனது லீலையில் இளம் பெண்?

சாலைகளில் பணத்தினை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்

பறக்கும் விமானத்தில் கழிவறை என நினைத்து அவசரகால வழியை திறந்த பெண் பயணி