உள்நாடு

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) – இரண்டாவது நாளாக இன்றும்(03) கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் 52 இடங்களில் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (02) ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் இன்று (03) செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்களை சோதனைக்குட்படுத்திய பின் வேறொரு வர்ணத்திலான ஸ்டிக்கர் ஒன்று இன்று (03) பயன்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கும் காலம் வரை இந்நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து