வகைப்படுத்தப்படாத

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு:பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

(UDHAYAM, COLOMBO) – இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

தமது பூர்வீக இடமான  இரணைதீவை  தம்மிடம் கையளிக்க வேண்டும் என கோரி அறுபதாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  இரணைதீவு மக்களை போராட்ட இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா ,சிறிதரன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: எஸ்.என்.நிபோஜன்

Related posts

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

ඉන්දියන් සාගරයේ රික්ටර් මාපක 6.5ක භූ කම්පනයක්

2019 අවසාන අර්ධ චන්ද්‍රග්‍රහණය අදයි