சூடான செய்திகள் 1

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி

(UTVNEWS | COLOMBO) – நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி, கிரிமிட்டிகம, திஸ்பனகந்த பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் இன்று (05) காலை 10 மணி அளவில் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெக்கோ இயந்திரத்தின் ஒரு பகுதி திடீர் என விழுந்ததில் குறித்த நபர் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்

பொரளை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…