உலகம்

இம்முறை ஹஜ் வழிபாடுகளுக்கு 1000 யாத்திரிகர்கள்

(UTV|சவுதி அரேபியா) – இம்முறை ஹஜ் வழிபாடுகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட யாத்திரீகர்களையே அனுமதிக்கவுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை 29ம் திகதி ஹஜ் வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்போது வெறும் 1000 யாத்திரர்களையே அனுமதிக்கவுள்ளதாகவும் குறித்த அரசு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த யாத்திரர்கள் அனைவரும் வழிபாடுகள் நிறைவுக்கு வந்ததும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியர்களின் ஹஜ் கடமைக்கு சுமார் 25 இலட்சம் யாத்திரர்கள் வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி இஸ்ரேல் போரில் வெற்றி பெறும் – நெதன்யாஹு தெரிவிப்பு

editor

உக்ரைனுக்கு ஆதரவாகும் இத்தாலி