உள்நாடு

‘இப்போதைக்கு விலை அதிகரிப்பு இல்லை’ – லிட்ரோ

(UTV | கொழும்பு) – சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு முடியும் வரை லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என நிறுவனம் நேற்று (22) தீர்மானித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு சுமார் 1,500 ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (26) முடிவுக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்