உலகம்

இன்ஸ்டாகிராமை ரஷ்யா முடக்கியது

(UTV |  ரஷ்யா) – இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவையினை ரஷ்யா தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய ராணுவம் மற்றும் அதன் தலைமைக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் அறிக்கைகளை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா நிறுவனம் அனுமதித்து வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.

உக்ரைனில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்ததும் அவற்றுக்கு எதிரான எதிர்வலைகளை சமாளிக்க ரஷ்யா முன்பு பேஸ்புக் மற்றும் ட்விட்டரை முடக்கியது.

இன்று (14) முதல் தடை செய்யப்பட்ட இணையவழி சமூக வலைதளங்கள் பட்டியலில் Instagram சேர்க்கப்படும் என்று ரஷ்ய ஊடக கட்டுப்பாட்டாளர் இன்று அறிவித்தார்.

இன்ஸ்டாகிராம் ரஷ்ய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமாகும்.

Related posts

தடுப்பூசி செலுத்தாவிடின் இராஜினாமா செய்யுங்கள் : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கில் யுத்தம் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் – ஈரான் எச்சரிக்கை.

அமெரிக்காவில் மீண்டும் டிக்டொக்

editor