விளையாட்டு

இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் சபையினால் நடத்தப்படும், சம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் பயிற்சி போட்டி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்கின்றன.

லண்டன் கெனிங்டன் (Kennington) ஓவல் மைதானத்தில் இடம்பெறும் போட்டி இலங்கை நேரப்படி சுமார் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது.

Related posts

இலங்கை அணியில் இடம்பெறவுள்ள மாற்றம்

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி