உள்நாடு

இன்று 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் இன்று(02) சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை வேளையில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், இரவு வேளையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor

பம்பலபிட்டியில் தீ பரவல்