சூடான செய்திகள் 1

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று  காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

Related posts

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது

ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம்