உள்நாடு

இன்று 24 மணிநேர நீர் விநியோக தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(26) முற்பகல் 10 மணிமுதல் 24 மணிநேர நீர் விநியோக தடை அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதிக்கும், மாபோல பிரதேசத்தின் ஒரு பகுதிக்கும், வெலிகடமுல்ல, ஹெந்தளை வீதி – நாயகந்த சந்தி வரையான அனைத்து கிளை வீதிகளின் பகுதிகளிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

இதேவேளை, அல்விஸ் நகர், மருதானை வீதி, கலஹதுவ மற்றும் கெரவலப்பிட்டியின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோக தடை அமுலாக்கப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பேருந்து பயண கட்டணத்தில் மாற்றமில்லை