உள்நாடு

இன்று வரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகும்

(UTV | கொழும்பு) – இன்று 40,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெட்ரோலுடன் நாட்டை வந்தடையவிருந்த கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல் விநியோகம் இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஓட்டோ டீசல் விநியோகம் முழுத் திறனில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சுப்பர் டீசல் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுமென காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபல பாடகர் W.D.ஆரியசிங்க காலமானார்

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொண்டு வர பசிலினால் விசேட குழு

பூஸா சிறையில் கைதி ஒருவர் குத்திக் கொலை

editor