சூடான செய்திகள் 1

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

(UTV|COLOMBO)  அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் இன்று வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும்,காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு