உள்நாடு

இன்று முதல் நவீன யுக்திகளுடன் சுற்றிவளைப்பு.

(UTV | கொழும்பு) –

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் இன்று (04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது.

நவீன யுக்திகளுடன் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையானர்களுக்கான புனர்வாழ்விற்காக பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்கீழ், குருணாகல் – கல்வல பிரதேசத்தில் இன்று(04) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கும் முஷாரப்பை வன்மையாக கண்டிக்கின்றேன் – அப்துல் மனாப்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]