உள்நாடு

இன்று முதல் தொலைபேசி சேவை கட்டண உயர்வு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை உயர்த்துவதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அனைத்து மொபைல், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன.

மேலும், கட்டண தொலைக்காட்சி சேவைகளின் கட்டணத்தை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்போவதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெறுமதி சேர் வரி அல்லது VAT திருத்தத்துடன் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பட்ஜெட் வாட் வரியை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, விலை அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனங்களால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

நுவரெலியாவில் தொடர்மழை – வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர் பூங்கா

editor

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – பிரசன்ன ரணதுங்க.

மேலும் 40 பேர் பூரணமாக குணம்