சூடான செய்திகள் 1

நாளை முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்றுமுதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த பத்தாயிரம் ரூபா இன்று முதல் பதினைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

இதேநேரம்  16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

 

 

 

 

 

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜர்