சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழு இன்று மீண்டும் இன்று முற்பகல் 11 மணி கூடவுள்ளது.

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் இன்றைய தினம் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வா, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறை பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை