உள்நாடுகாலநிலை

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வட மத்திய மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு

எமது கட்சியில் அலி சப்ரி, இசாக், முசரப் ஆகியோர் நிச்சயமாக வேட்பாளராக இருக்க மாட்டார்கள் – ரிஷாட் பதியுதீன்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்