உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் A/L வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை – பரீட்சைத் திணைக்களம் எச்சரிக்கை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவது இன்று (04) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதன் படி, பின்வரும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:

உயர்தரப் பரீட்சைக்கான மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடத்துவது.

பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது.

ஊகிக்கப்பட்ட வினாக்கள் (அனுமான வினாக்கள்) அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்.

பரீட்சை வினாத்தாள்களைப் போன்று ஒத்த வினாக்களை வழங்குவதாகத் தெரிவித்து சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது துண்டுப் பிரசுரங்கள் மூலம் அல்லது இலத்திரனியல் (மின்னணு) அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல்.

இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் தனிநபர் அல்லது நிறுவனம், பரீட்சைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Related posts

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்