உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.

ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக கையளிக்கவும் – சவூதி அரே­பியா

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து நீக்கம்!