உள்நாடு

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

(UTV | கொழும்பு) – இலங்கை பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபை இணைந்து நடத்தும் கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும், தெமட்டகொட வித்யாலங்கார பிரிவெனாவிலும் இன்று (13) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தடுப்பூசி செலுத்தல் மையங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

editor

தனிப்பட்ட தகராறு – ஒருவர் பலி – இருவர் கைது

editor

ரயில் பாதையில் பயணித்த தம்பதி பலி

editor