உள்நாடு

இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

editor

23ம் திகதி விசேட விடுமுறை

editor