உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காலி, அக்மீமனவில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் வீடு ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மிதிகம பிரதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்துள்ளதோடு, சில நாட்களுக்கு முன்னதாக ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட ஊழியர் பின்னர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை அச்சுறுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காலி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

முஸ்லிம், கிறிஸ்தவ மன்னர்களின் மத வெறி போல் சரத் வீரசேகர- சச்சிதானந்தம்

அக்கறைப்பற்று பெரிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட வந்த பொல்கஹவெல பிரதேச மாற்று மதத்தவர்கள்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor