வகைப்படுத்தப்படாத

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி

(UDHAYAM, COLOMBO) – பெந்தொட்ட பிரதேசத்தில் இன்று அதிகாலை(29) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து காலி திசை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும், எதிர் திசையில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயங்களுக்கு உள்ளான மோட்டார் வாகனத்தின் பின்புற இருக்கையில் பயணித்த இரண்டு பெண்கள், பெந்தொட்ட மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் வாகனத்தின் சாரதி, பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெலியத்த – குடஹில்ல மற்றும் அம்பலாங்கொட – ரிதிகம பிரதேசங்களை சேர்ந்த 35 மற்றும் 37 வயதான பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தற்போது பெந்தொட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பாரவூர்தியின் சாரதி காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Sale of imported liquor without ‘EDSL’ sticker banned

ரயில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு

New hotlines to inform police about disaster situation