வகைப்படுத்தப்படாத

இன்றும் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பாகங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமான குறிப்பாக மத்திய மலைத் தொடரின் மேற்கு சரிவுகளில் பலத்த காற்று வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோரங்களை அண்டிய பகுதிகளில் 60 முதல் 70 கிலோ மீற்றருக்கு அதிகமான கடும் காற்று வீசக்கூடும்.

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும். வடக்கு மற்றும் தெற்கு கடற்பரப்புக்கள் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையிலான காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவாகக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடி அல்லது இடியுடன் கூடிய மழை கிழக்க மற்று ஊவா மாகாணங்களின் பல பிரதேசங்களில் பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். மழையின் போது ஏற்படும் மின்னலிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாறை-அக்கரைபற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

விரைந்து பரவும் காட்டுத்தீ

Kim Kardashian denies rumours of removing ribs to fit in Met Gala outfit