அரசியல்உள்நாடு

இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் CID யில் முறைப்பாடு

துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர், ஆளுநர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சமீப நாட்களாக என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது, எனவே இன்று நான் CIDயிடம் சென்று இது குறித்து முறைப்பாடு அளித்தேன்.

தோற்கடிக்கப்பட்ட குழுக்கள் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது நான் அமைதியாக இருக்க முடியாது.

மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ள முடியாது.”

Related posts

மலையக மக்களுக்கு உரிமை இல்லை என யாரும் கூற முடியாது – ஜனாதிபதி அநுர

editor

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டது

editor