வகைப்படுத்தப்படாத

இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உனா மெக்கோலி

(UDHAYAM, COLOMBO) – இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மெக்கோலி வலியுறுத்தியுறுத்தலை விடுத்துள்ளார்.

இனரீதியான வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர், கடந்த வாரத்தில் விசாகப்பூரணையை கொண்டாடியவர்கள் இந்த வாரம் புத்தரின் போதனைகளை மறந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ගම්පහ දිස්ත්‍රික්කයේ ප්‍රදේශ රැසකට ජලය කප්පාදුවක්

Water cut for several areas on Friday

இராஜதந்திர உறவினை மேம்படுத்த தாய்வான் புதிய கொள்கை