உள்நாடுபிராந்தியம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அருகில் ஆரம்பமான போராட்டம் – அரசியல்வாதிகள் பங்கேற்பு

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் இந்த போராட்டமானது ஆரம்பமாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-கஜிந்தன்

Related posts

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!