அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது – நீதியான விசாரணை வேண்டும் – நாமல் எம்.பி

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் மரணம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தில் கூட தவறான ஆதாரங்களை உருவாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (01) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் எனவும்.

அத செய்யப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைக்கிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

Related posts

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor

கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கைது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்