உள்நாடு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related posts

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி – பிடியாணையை மீளப்பெற உத்தரவு

editor

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 பேர் பலி!

முறுகல் இல்லாத கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியும்