வகைப்படுத்தப்படாத

இந்திய பஸ் விபத்தில் 48 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தரகான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் பள்ளத்தில் வீழ்ந்தமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்தில் 45 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மேலும் 03 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உத்தரகான்ட் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 59 பேர் குறித்த பஸ்ஸில் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

ஒவ்வொரு பெற்றோர்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி