அரசியல்உள்நாடு

இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து இங்கு இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, அருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அவ்வாறே, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related posts

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

editor

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஆய்வறிக்கை

editor

இறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி