உலகம்

இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம்

(UTV |  பாகிஸ்தான்) – இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 இலட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன், அம்பியூலன்ஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எதி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 அம்பியூலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related posts

சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

கொரோனா நோயாளிகளைக் கவனிக்க புதிய வகை ரோபோ