உலகம்

இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரமாக உள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

மேலும் இதுவரை 46 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் படி, இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் கிட்டதட்ட 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பார்தல் இந்த விகிதம் 1 இலட்சம் பேருக்கு 87 பேராக உள்ளது.

இதுவே ஸ்பெயின் ஒரு இலட்சம் பேருக்கு 515ஆகவும், பிரிட்டனில் 419 ஆகவும், இத்தாலியில் 387 ஆகவும் பாதிப்பு உள்ளது.

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் – சக்திவாய்ந்த பதிலடி தாக்குதல் வழங்குவோம் இஸ்ரேல்!

editor

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று