வணிகம்

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு) – இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்வதற்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெரிய வெங்காய தொகையை இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை ​135 முதல் 140 ரூபாவிற்கு இடையில் காணப்படுவாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில், வருடாந்தம், பெரிய வெங்காயத்திற்கு, 250,000 மெட்ரிக் தொன் கேள்வி நிலவுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டில் வெங்காய உற்பத்தி 25,000 மெட்ரிக் தொன்னாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

மட்டக்களப்பில் லங்கா சதொச