உள்நாடு

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Update – உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபரும், ஆசிரியரும் விளக்கமறியலில்

editor

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு

editor

டொலரில் இன்றைய நிலவரம்