உள்நாடு

இடைக்கால தடை உத்தரவு நாளை வரை நீடிப்பு

(UTV | கொழும்பு) – குருநாகல் அரசவை தகர்ப்பு சம்பவம் தொடர்பில் குருநாகல் நகர சபை முதல்வர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தம்மை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்ஜீவ விதாரண மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பின்னர், குருநாகல் நகரசபை முதல்வர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனா தடுப்பூசிக்கு முன்னுரிமை பெறுவோர் சீனர்களே

உள்நாட்டு மதுபானங்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் அதிகரிப்பு

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை