மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, புகைப்படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
