உள்நாடு

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

editor

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்