உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம்

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Related posts

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்