கேளிக்கை

இடிந்து போகும் ஆள் நானில்லை…

(UTV|INDIA)-ஹன்சிகா தற்போது விஷ்ணு விஷால், விக்ரம் பிரபுவுடன் ஒவ்வொரு படத்தில் நடித்து வருகிறார். அவை தவிர வேறு படங்கள் இல்லை. அவரது 50-வது படமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மகா என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

சினிமா குறித்து ஹன்சிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது:- ’50-வது படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். மகா ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம். முதல்முறையாக இது போன்ற படத்தில் நடிக்கிறேன்.

நான் வெற்றிகரமான நடிகையாவேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன். அதனால் தான் என்னை தேடி நல்ல நல்ல படங்கள் வருகின்றது. நான் பெரிய படங்களில் நடிப்பேன் என்று தெரியும். என் கெரியரில் உச்சத்தை தொடுவேன் என்றும் தெரியும்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் புதிதாக ஏதாவது கற்கிறேன். நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். பல மேதைகளை சந்தித்து பேசியுள்ளேன். தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று இடிந்து போகும் ஆள் இல்லை நான்.

நான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 ஸ்க்ரிப்டுகளை நிராகரித்துள்ளேன். முன்பெல்லாம் நான் ஆண்டுக்கு 8 படம் பண்ணினேன். தற்போது ஆண்டுக்கு 4 படங்கள் செய்கிறேன். அதற்காக நான் தினமும் வேலை பார்க்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

ஓவியம் வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வரைகிறேன்’ என்று கூறி இருக்கிறார் ஹன்சிகா.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

கூட்டணியாகும் நயன் – சமந்தா