வகைப்படுத்தப்படாத

இடாய் சூறாவளியால் 1000 பேர் உயிரிழப்பு

(UTV|MOZAMBIQUE) ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயரக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி பிலிப்பே நியுஸி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,தகவல் தொடர்பும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஸாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ரா (Beira) பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

680 மில்லியன் டொலர் ஊழல்

Wheat flour price hiked

அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு