உலகம்

இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகிற16ஆம் திகதி இங்கிலாந்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரணாப் முகர்ஜி காலமானார்

கொரோனா  என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி