வகைப்படுத்தப்படாத

ஆவா குழுவுடன் தொடர்புடைய இளைஞன் கைது

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபரிடமிருந்து வாள் மற்றும் இரும்பு கம்பியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் யாழப்பாணம், கோப்பாய், மாணிப்பாய் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Ton-up Bairstow stars as England book World Cup semi-final spot

ACMC Deputy Leader resigns from party membership

புதிய பதவியின் ஊடாக கட்டளையிடப்படாது – சரத் பொன்சோகா