உள்நாடு

ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இவை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசி பங்குகளை சுகாதார அமைச்சகம் பெற்றுக் கொள்ளும்.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே இலங்கை பிரஜைகளுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சீனாவிலுள்ள உயர்கல்வியை தொடர்கின்ற இலங்கை மாணவர்களுக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Related posts

300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கிய ஜப்பான் அரசு

editor

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கும்  ஆசிரியர் சங்கம்